புத்தகங்களை வாசிக்க எனக்கு அலுப்பு ஏற்பட்டதில்லை.நான் புத்தகம் வாசிக்க ஒரு முக்கிய காரணம் எனது சித்தப்பா. எனது பள்ளிப்பருவத்தில் அதிலும் 5-ம் வகுப்புக்கு முன்னரே அவர் எனக்கு பல புத்தகங்களை வாங்கித் தந்தார். அப்பொழுது நாங்கள் திருப்பூரில் இருந்தோம். எனது பள்ளியில் ஒரு எக்ஸிபிஷன் போடுவார்கள். அதில் நிறைய ரஷ்ய சிறுக்கதைகள் (ஆங்கிலத்திலும், தமிழிலும்) இருக்கும். அவற்றை வாங்கி தருவார். அது மட்டுமன்றி அம்புலிமாமா, பாலமித்ரா, பூந்தளிர், கோகுலம், ராணி காமிக்ஸ், பிக்விக் போன்றவைகளும் வாங்கி வருவார்.மற்ற பெரியவர்கள் என்ன சொன்னாலும் கண்டுக்கொள்ள மாட்டார். படித்தால் போதும் என்று நினைப்பவர். புத்தகங்கள் வாங்க நான் செலவழிக்க தயங்காததற்கு காரணம் இவரும் என்று சொல்லலாம்.
விக்ராமதித்தன் கதைகள், பஞ்சத்தந்திரக் கதைகள், மதனகாமராஜன் கதைகள், சிந்துபாத் மற்றும் இன்னப்பிற புத்தகங்களை வாசித்தது அந்த வயதில் தான். புத்தகங்களின் அளவு சாதாரணமாகி போனது. எதையும் தேவைப்பட்டால் வாசிக்க தயக்கம், பயம் இல்லாமல் போனது. இவை ஏற்பட காரணம் அப்போதைய வாசிப்பு தான். எனக்கு தெரிந்து கோகுலம், அம்புலிமாமா இன்னும் வந்துக் கொண்டிருக்கிறது. அதில், அம்புலிமாமா இணையத்தில் வாசிக்க கிடைக்கின்றது. சுட்டி கீழே.
http://www.chandamama.com/lang/story/stories.php?lng=TAM&mId=12&cId=43&stId=1440
- NSR.
No comments:
Post a Comment