ரஷோமோன் ட்ரைலர்
ரஷோமோனைப் பற்றி ஒரு தனிப்பதிவாகவே எழுத வேண்டும். இதில் என்னை ஆச்சர்யப்படுத்திய விஷயம் பல உண்டு. அதில் முதலாவது, அந்த படத்தின் துவக்கத்தில் காண்பிக்கப்படும் அந்த பாழடைந்த வீடு மற்றும் அதன் பெயர் தான் ரஷோமோன் என்பதும். வித்தியாசமான காட்சியமைப்பு கொண்ட இப்படம் திரைக்கதை அமைத்தலுக்கு சிறந்த உதாரணம்.உலகச்சினிமாப் பிரியர்கள் கண்டிப்பாய் பார்க்க வேண்டிய படம்.

இணையத்தில் இதைப்பற்றி தேடும் பொழுது "அந்த நாள்" திரைப்படத்தில் இந்த கதைச்சொல்லல் முறை பயன்படுத்தியது தெரிந்தது. அதையும் சில மாதங்களுக்கு முன்பு தான் பார்த்தேன். அந்தக்காலத்தில் வந்த ஒரு வித்தியாசமான படம். இயக்கியவர் வீணை வித்வான் எஸ்.பாலச்சந்தர்.நடிகர் சிவாஜி கணேசன் நடித்ததில் எனக்குப் பிடித்த சில படங்களில் இதுவும் ஒன்றாகிவிட்டது. கதைக்களன் (திரைக்கதை வசனம்: ஜாவர் சீதாராமன்)சிறப்பாக அமைத்திருந்தது ஒரு காரணம். பாடல்களைத் தவிர்த்தது முக்கியமான விஷயம். பல கிளிஷேக்களைத் தவிர்த்து எடுக்கப்பட்ட படம். இதுவரை பார்க்காமலிருந்தால் கண்டிப்பாக பார்க்கவும்.
அந்த நாள் முதல் காட்சி
அந்த நாளில் வரும் Debate
மேலே பார்த்த இருப்படங்களைப் பார்க்கும் பொழுது சற்றுக்குறைவான கதை அழுத்தத்துடன் கொஞ்சம் ஹீரோ ஒர்ஷிப்புடன் வந்த ப்டம் விருமாண்டி. அதைக் கொஞ்சம் கவனித்து எடுத்திருந்தால் இன்னும் சிறப்பாக வந்திருக்கும். ஆனாலும் இது ஒரு சிறந்த சோதனை முயற்சி. இப்படத்தினாலேயே அந்த இருப்படங்களையும் பார்க்க நேர்ந்தது. அதற்காகவே கமலுக்கு ஒரு நன்றி :)
- NSR.