எஸ்.ராமகிருஷ்ணன், தற்கால எழுத்தாளர்களில் முக்கியமானவர். ஆனந்த விகடன் மூலமாக தான் இவரது எழுத்து எனக்கு பரிச்சயமானது. அதில் வந்த கதாவிலாசம் பல எழுத்தாளர்களையும் அவர்களது முக்கிய படைப்புக்களையும் அறிமுகப்படுத்தியது. தேசாந்திரி பயண அனுபவங்களை தந்தது. அதை தொடர்ந்து அவரது கட்டுரைகளையும், சிறுகதைகளையும் அவரின் இணையத்தளத்தின் மூலமாக படித்து வருகிறேன். எழுத்தாளர்கள், பயணங்கள் மட்டுமல்லாது அயல் சினிமா பற்றியும் இவரின் கட்டுரைகள் ஒரு நல்ல அறிமுகத்தை தந்தது. என்னை போல பல வாசகர்களுக்கும் இவரின் எளிய நடை வாசிப்பிற்கு உறுதுணையாக உள்ளது.
வாழ்வின் எளிய,முக்கிய தருணங்களை படம் பிடித்து காட்டும் இவரின் எழுத்து ஹைக்கூவை போல ஒரு பரவசத்தினை தருகிறது. என் மனதிற்கு நெருக்கமான் எழுத்து இவருடையது.
எஸ்ரா தற்போது எழுதி வரும் "சிறிது வெளிச்சம்" தொடரையும் படித்து வருகிறேன். ஒரு ஆழ்ந்த வாசிப்பானுபவம் பெற இவரின் எழுத்துகளை இங்கே படித்து பாருங்கள். இவரின் புத்தகங்களை வாங்க உயிர்மை தளத்தை அணுகவும்.
No comments:
Post a Comment