Friday, September 12, 2008

Bharathi Ninaivugal



பாரதியார் - சில குறிப்புகள் :தங்கம்மாள்



மிருக ராஜனும் கவி ராஜனும்..!



ஒரு சமயம் திருவனந்தபுரம் சென்றிருந்தோம். அங்கு எங்களோடு நெருங்கிய நண்பரும், ஒரு வகை பந்துவுமான ஒருவர் வீட்டில் கல் யாணம். சம்பந்தி வீட்டார் பெரிய ஸர்க்கார் உத்யோகத்திலிருப்ப வர்கள். ''பாரதி வந்திருக்கிறார்'' என்ற தைக் கேட்டதுமே, 'சம்பந்திகள் உத்யோகஸ்தர்கள். ஒரு பக்கா சுதேசியை இந்தச் சமயத்தில் வர விடக் கூடாது' என்று தீர்மானித்து, பாரதியை நேரில் கண்டும்கூட, ''விவாஹத்துக்கு வாருங்கள்'' என்று அவர் அழைக்கவில்லை. ஆயினும், அவ்வீட்டு அம்மாளுக்கு மட்டும் பாரதியிடம் உள்ளன்பு உண்டு.
அவ்வீட்டுக்குச் செல்லக்கூடா தென்று நாங்கள் பலமுறை வேண்டிக்கொண்டும் கேளாமல், அழையாத வீட்டுக்குள் நுழைந்தார் பாரதி. வீட்டு எசமான் வாவென்று அழைக்கவில்லை. எனினும், கொஞ்சங்கூட முகவாட்டமின்றி மடமட வென்று உள்ளே சென்றார். வீட்டு அம்மாளிடம் சென்று, ''அம்மா! குழந்தைக்கு விவாஹம் ஆயிற்றா?'' என்று பரிவோடு கேட்டார். அந்த அம்மணியின் கண்களில் நீர் துளித்தது. மனது உருகிற்று.
''பாரதி! என்னை மன்னிக்க வேண்டும். நீர் மாசுமறுவற்றவர். நாங்கள் உத்யோக ஆசையினா லும் பணத் திமிரினாலும் சில சமயங்களில் மெய்ம்மறந்து தங் களைப் போன்ற உத்தமர்களின் சகவாசத்தைக் கைவிடுகிறோம். நேற்று தங்களை நேரில் கண்டும் அழையாதிருந்தோம். அதிலி ருந்து என் மனது, 'தவறு செய் கிறாய்' என்று வாள் கொண் டறுக்கிறது. எத்தனையோ பெரிய பெரிய மனிதர்கள் வந்து கல்யாணம் விசாரித் துச் சென்றார்கள். ஆயினும் இப்போது தாங்கள் வந்து விசாரிக்கும்போது எனக்கு ஏற்பட்ட சந்தோஷமும் ஆறு தலும் இதற்கு முன் ஏற்படவில்லை'' என்றாள்.
''அம்மா! மனதுக்கு மனமே சாட்சி! நான் வரா விட்டால் உன் மனம் துயரடையும் என்று தெரிந்தே, என் வீட்டார் தடுத் தும் நான் இங்கு வந்தேன்'' என்று கூறினார் பாரதி. திருமணத் தம்பதி களை வரவழைத்து, அவர்களைத் தழுவி ஆசீர்வதித்தார்.
சாயங்காலம் மூன்று மணிக்கு, வந்திருந்த விருந் தினரும் கல்யாண வீட்டாரும் மிருகக் காட்சி சாலைக்குச் சென்றனர். அப்பா வும் நாங்களும் சென்றோம்.
அங்கே மிருகங் களைப் பார்ப்பதில் சற்று நேரம் கழிந் தது. மறுபடியும் எங்களுக்குக் கஷ்டம் ஆரம்பித் தது. ஏனெனில், அப்பா எல்லா மிருகங்களையும் கையினால் தொட்டுப் பார்க்க ஆரம்பித்தார். குரங்குகள், கரடிகள், காட்டு மனிதன் (ஊராங் உட்டாங்) எல்லாவற்றையும் தொட்டுப் பார்த்துக் கடலை, பழம் கையிலே கொடுத்தார். அந்த மிருகங்கள் அப்பாவை நகங்களினால் கிழித்துப் பிறாண்டி விடாதிருக்கவேண்டுமே என்று நாங்கள் கவலைப் பட்டோம். மிருகங்களுக்குத் தீனி போடும் வேலைக்காரக் கிழவனொருவன் இவரது போக்கைத் தெரிந்துகொண்டு, ''சாமி! புலியையும் சிங்கத்தையும் மட்டும் தொடவேண்டாம். ஏனெனில், அவைகளுக்கு ஒரு சமயம் இருக்கும் புத்தி மற்றொரு சமயம் இராது. அவை கையினால் லேசாக ஒரு தட்டுத் தட்டினால்கூட உங்களால் தாங்க முடியாது'' என்று எச்சரிக்கை செய்தான்.
''நீ பயப்படாதே! என்னை ஒன்றும் செய்யாது. நான் தழுவிக்கொண்டால் அவை எனக்கு ஒரு தீங்கும் செய்யமாட்டா'' என்று அப்பா சொன்னதும், எங்க ளுக்குப் பயத்தினால் உடம்பு கிடுகிடென்று நடுங்க ஆரம் பித்தது. என் தாயார், ''சிங்கத் திற்கு நல்ல புத்தி கொடு, பகவானே!'' என்று மனதிற்குள் பிரார்த்தித்தார். அரை மனதோடு கிழவன், சிங்கத்தை அருகில் வரவழைத்தான்.
''மிருக ராஜா! கவிராஜ் பாரதி வந்திருக்கிறேன். உனது லாகவ சக்தியையும் வீரத்தையும் எனக்குக் கொடுக்கமாட்டாயா? இவர்கள் எல்லாரும் நீ பொல் லாதவனென்று பயப்படு கிறார்கள். உங்கள் இனந்தான் மனிதரைப்போல உள்ளன்று வைத்துப் புறமொன்று செய்யும் சுபாவம் இல்லாதது என்ப தையும், அன்பு கொண்டோரை வருத்தமாட்டீர்களென் பதையும் இங்கிருப்போர் தெரிந்து கொள்ளும்படி, உன் கர்ஜனையின் மூலம் தெரியப் படுத்து, ராஜா!'' என்றார் பாரதி.
என்ன ஆச்சர்யம்! உடனே சிங்கம் கம்பீரமாகப் பத்து நிமிஷம் கர்ஜித்தது.
அவருக்குத் திருப்தியாகும் வரை அரைமணி நேரம் மிருகேந்திரனைப் பிடரி, தலை, காது எல்லாம் தடவிக் கொடுத்துவிட்டு, எங்களது தொந்தரவினால் வாயில் மட்டும் கைவிடாமல் அதனிடம் விடைபெற்றுக் கொண்டார்.



மகுடி இசையில் 'வந்தே மாதரம்'!
மகாகவி பாரதி, தன் நண்பரின் மகளான யதுகிரி மற்றும் சிலருடன் பாம்பாட்டி மகுடி வாசிப்பதைக் கேட்டுக்கொண்டிருந்தார். அவர் களைக் கண்ட அவனும் குஷியாக மகுடி ஊதினான்.
பாரதியாருக்கு என்ன தோன்றி யதோ தெரியவில்லை, தன் மேலாடை யைக் களைந்து அவனுக்கு அளித்து விட்டு வெறும் வேஷ்டியுடன் நின்றார். அந்தப் பாம்பாட்டி மனம் மகிழ்ந்து, அவரை வணங்கிவிட்டுச் சென்றான். வீட்டுக்குத் திரும்பியதும் பாரதியை சிறுமி யதுகிரி கேட்டாள்: ''ஏன் அந்தப் பாம்புப் பிடாரனுக்கு உடைகளைக் கழற்றித் தந்தீர்கள்?''
பாரதி புன்முறுவலுடன், ''எனக்கு நாலு பேர் கொடுக்கத் தயாராயிருக் கிறார்கள். அந்த ஏழைப் பாம்பாட் டிக்கு யார் கொடுப்பார்கள்? நானே அதைப் பற்றி யோசிக்கவில்லை; உனக்கென்ன அந்தக் கவலை?'' என்று பதிலளித்தார்.
மறுநாள் மாலையில், பாரதி சில தேசிய கவிதைகளைப் பாடிக் காட்டி னார். அதில் ஒன்று, 'வந்தே மாதரம் என்போம்' என்று தொடங்கும் பாடல்.
அதில் சிறப்பு என்னவென்றால், அந்தப் பாம்பாட்டி மகுடியில் வாசித் தானே, அதே மெட்டில்தான் பாரதி இப்பாடல் எழுதினார்.

ஆதாரம்: யதுகிரி அம்மாள் எழுதிய 'பாரதி நினைவுகள்'



நன்றி: ஆனந்த விகடன்



பி.கு. நான் “பாரதி நினைவுகள்” புத்தகத்தை வாசித்திருக்கிறேன். சிறப்பான புத்தகம். மேலும் அவரைப் பற்றி வாசிக்க ரா.பத்மனாபன் எழுதிய “பாரதி” யைப் படிக்கவும். இப்புத்தகங்கள் அவருடைய வாழ்க்கையினூடே நம்மைக் கூட்டி செல்கிறது. அவர் வாழ்ந்த காலத்தில் கிடைக்காத அங்கீகாரம் ஒரு சாபக்கேடு.



- NSR.

No comments: