ஆயிரம் தெய்வங்கள் உண்டென்று தேடி
அலையும் அறிவிலிகான் - பல்
ஆயிரம் வேதம் அறிவு ஒன்றே தெய்வம்,
உண்டாம் எனக் கேளீரோ.
மாடனைக் காடனை வேடனைப் போற்றி
மயங்கும் மதியிலிகாள் - எதனூடு
நின்றோங்கும் அறிவு ஒன்றே தெய்வம்
ஓதி அறியீரோ.
சுத்த அறிவே சிவம் என்று கூறும்
சுருதிகள் கேளீரோ - பல
பித்த மதங்களிலே தடுமாறிப்
பெருமை யழிவீரோ.
வேடம் பல்கோடி ஒரு உண்மைக்குள் உள்ளது
என்று வேதம் புகன்றிடுமே - ஆங்கோர்
வேடத்தை நீர் உண்மை என்று கொள்வதை
வேதம் அறியாதே.
நாமம் பலகோடி ஒரு உண்மைக்குள் உள்ளது.
என்று நான்மறை கூறிடுமே - ஆங்கோர்
நாமத்தை நீர் உண்மை என்று கொள்வதை
நான்மறை கண்டிலதே.
கவலை துறந்திங்கு வாழ்வது வீடென்று
காட்டும் மறைகள் எல்லாம் - நீவிர்
அவலை நினைத்து உமி மெல்லுதல் போல்
இங்கவங்கள் புரிவீரோ!
உள்ளது அனைத்திலும் உள் ஒளியாகி
ஒளிர்ந்திடும் ஆன்மாவே - இங்குக்
கொள்ளற்கரிய பிரமம் ஒன்றே மறை
கூவுதல் கேளீரோ!
மெள்ளப் பல தெய்வம் கூட்டி வளர்த்து
வெறுங்கதைகள் சேர்த்துப் பல
கள்ள மதங்கள் பரப்புதற்கோர் மறை
காட்டவும் வல்லீரோ!
ஒன்று பிரமம் உளது உண்மை - அது உன்
உணர்வெனும் வேதமெலாம் - என்றும்
ஒன்று பிரமம் உளது உண்மை அது உன்
உணர்வெனக் கொள்வாயே.
- பாரதி
Showing posts with label Writings. Show all posts
Showing posts with label Writings. Show all posts
Friday, June 25, 2010
Friday, August 07, 2009
Nagulan !

Nagulan-Kavithaigal
மேலே விடுபட்ட, எனக்கு பிடித்த சில கீழே..
என்னைப் பார்க்க வந்தவர்
தன்னைப் பார்
எனச் சொல்லிச் சென்றார்!
=============================
ஆர்ப்பரிக்கும் கடல்
அதன் அடித்தளம்
மெளனம்; மகா மெளனம்!
=============================
வெளியீடு : காவ்யா பதிப்பகம், சென்னை.
- NSR.
Monday, July 06, 2009
வாசிப்பு - 2
எஸ்.ராமகிருஷ்ணன், தற்கால எழுத்தாளர்களில் முக்கியமானவர். ஆனந்த விகடன் மூலமாக தான் இவரது எழுத்து எனக்கு பரிச்சயமானது. அதில் வந்த கதாவிலாசம் பல எழுத்தாளர்களையும் அவர்களது முக்கிய படைப்புக்களையும் அறிமுகப்படுத்தியது. தேசாந்திரி பயண அனுபவங்களை தந்தது. அதை தொடர்ந்து அவரது கட்டுரைகளையும், சிறுகதைகளையும் அவரின் இணையத்தளத்தின் மூலமாக படித்து வருகிறேன். எழுத்தாளர்கள், பயணங்கள் மட்டுமல்லாது அயல் சினிமா பற்றியும் இவரின் கட்டுரைகள் ஒரு நல்ல அறிமுகத்தை தந்தது. என்னை போல பல வாசகர்களுக்கும் இவரின் எளிய நடை வாசிப்பிற்கு உறுதுணையாக உள்ளது.
வாழ்வின் எளிய,முக்கிய தருணங்களை படம் பிடித்து காட்டும் இவரின் எழுத்து ஹைக்கூவை போல ஒரு பரவசத்தினை தருகிறது. என் மனதிற்கு நெருக்கமான் எழுத்து இவருடையது.
எஸ்ரா தற்போது எழுதி வரும் "சிறிது வெளிச்சம்" தொடரையும் படித்து வருகிறேன். ஒரு ஆழ்ந்த வாசிப்பானுபவம் பெற இவரின் எழுத்துகளை இங்கே படித்து பாருங்கள். இவரின் புத்தகங்களை வாங்க உயிர்மை தளத்தை அணுகவும்.

Tuesday, February 10, 2009
வாசிப்பு - 1
சமீபகாலமாக எனது பெரும்பான்மையான வாசிப்பு வலைத்தளங்கள் மூலமாகவே உள்ளது. பலர் சிறப்பாக எழுதி வருகின்றனர். அவ்வாறு வாசிக்கும் எழுத்துக்களை இங்கு பகிர்ந்து கொள்ளலாம் என்று நினைக்கிறேன். இவற்றில் எந்தவிதமான மதிப்பீடலும் இல்லை.
முதலில் பத்ரி. இவர் கிழக்கு பதிப்பகத்தின் நிறுவனர். பன்முகம் கொண்டவர். அரசியல், அறிவியல் , கணிதம் என்று பல தளங்களில் எழுதுபவர். இவர்அறிவியல் கட்டுரைகளை சிறப்பாக தமிழில் எழுதுகிறார்.
இவரும் மற்றும் சில நண்பர்களும் தற்போது அறிவியல் என்று ஒரு தளத்தில் எழுதுகின்றனர்.
இப்போதைக்கு இவ்வளவே..
பி.கு. தமிழில் டைப் செய்வது இவ்வள்வு சிரமமாக இருக்கும் என்று நினைக்கவில்லை. பழகிவிடும் என்று நினைக்கிறேன்.

Subscribe to:
Posts (Atom)